அன்னை(அம்மா)
அம்மா,நீ பொறுமை என்னும் தவக்கடலில்
பத்து மாதம் சுமந்து என்னை பெற்றாய்!
உன் ரத்ததில் என்னை மெழுகேற்றி
பிறப்பு என்னும் ஒளி கொண்டு வந்தாய்!
முத்தம் என்னும் அமுதத்தை கொண்டு
நாள்தோறும் என்னை குளிப்பாட்டினாய்!
வலி என்னும் துன்பம் தந்து
அம்மா என்று அழைக்கச் செய்தாய்!
அறிவு என்னும் பள்ளிக்கு அழைத்துச் சென்று
நட்பு என்னும் கோயிலைக் காட்டினாய்!
என் இன்பத்தில் இருக்கும் உன் துன்பத்தை
வெளிக் கொணராமல் இருந்தாய்!
உனது பிறப்பால் எனது பாலை வனங்கள்
சோலை வனங்கள் ஆகின!
ஆனால், எனது பிறப்பால் உனது சோலைவனங்கள்
பாலை வனங்கள் ஆகின!!
உன் அன்பின் ஆழத்தை அறிய
தமிழில் உள்ள வார்த்தைகள் கூட பத்தாது!
-அரிகரசுதன்.